| ADDED : ஆக 23, 2024 02:42 AM
கூடலுார்:கூடலுார் பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்ட, 5.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையை பிப்., 25ம் தேதி முதல், திறந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் விரிவு படுத்தும் வகையில், அதனை ஒட்டிய பழைய பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்தும் பணி, துவங்கவில்லை.இதனால், ஏற்கனவே பயன்படுத்தி வந்த பகுதியை மட்டும் பஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக, பல பஸ்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, பழைய பணிமனை பகுதியை பஸ் ஸ்டாண்டாக விரிவுப்படுத்தும் பணி துவங்காததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், பணிமனையை பஸ் ஸ்டாண்ட் விரிவுப்படுத்தும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. முதல் கட்டமாக, அப்பகுதியில் உள்ள கட்டடத்தின் மேற்கூரை, சுவர்கள் அகற்றும் பணியை துவங்கி உள்ளனர்.இதனை வரவேற்றுள்ள பயணிகள், 'விரிவுபடுத்தும் பயணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.