நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஓணம் கொண்டாட காங்., உதவி
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்., சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட பொருட்கள் வழங்கப்பட்டன.கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில், அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில், 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கான உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சோகம் காரணமாக, கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எளிமையாக நடந்தது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட ஏதுவாக, மாநில காங்., தலைவர் செல்வ பெருந்தகை ஏற்பாட்டின் பேரில், சமையல் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை, மாநில காங்., பொதுச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.எல்.ஏ., கணேஷ், மாநில பொதுச் செயலாளர் கோசி பேபி, செயற்குழு உறுப்பினர் அஷ்ரப், நிர்வாகி ரவி உள்ளிட்டோர் வழங்கினர்.