உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பந்தலுார், ; பந்தலுார் அருகே, சேரம்பாடி பகுதியை ஒட்டி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு மேப்பாடி நெடும்பாலா என்ற இடத்தில், சிறுத்தை ஒன்று தோட்டத்து வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வயநாடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, வைத்திரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 'சிறுத்தையின் கால் மற்றும் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை