உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கீழ் கோழிக்கரை கிராமம் குடிநீர் வசதி இல்லாமல் அவதி

கீழ் கோழிக்கரை கிராமம் குடிநீர் வசதி இல்லாமல் அவதி

ஊட்டி;'ஊட்டி கீழ் கோழிக்கரை கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும்,' என, மக்கள் மனு அளித்துள்ளனர்.கிராம மக்கள் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:ஊட்டி ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட, கீழ் கோழிக்கரை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், கூலி தொழில் செய்து வருகின்றனர்.இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக, குடிநீர் வசதி இல்லாமல், மக்கள் குறிப்பாக, பெண்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொலை துாரம் நடந்து சென்று, மாசு கலந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் வசதி கேட்டு, பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, ஆழ்துளை கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி