உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணி

ஊட்டி ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணி

ஊட்டி; ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு ரோஜா கண்காட்சி மே மாதம் நடக்கிறது. கண்காட்சிக்காக, 4,000 வகைகளில், 36 ஆயிரம் ரோஜாக்கள் தயார்படுத்தி காட்சிப்படுத்தப்படுகிறது. சமீபத்தில், ரோஜா செடிகளில் 'புரூனிங் பணிகள்' மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ஆங்காங்கே உள்ள பாத்திகளில் உள்ள ரோஜா செடிகளுக்கு காலை, மாலை நேரங்களில் உரம் கலந்த தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணியர், ரோஜா மலர்களை காண, மேல்பகுதியில் உள்ள பகுதிகளில் சில வகை ரோஜாக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்., இரண்டாவது வாரத்தில் ரோஜாக்கள் பூத்து கோடை சீசனுக்கு தயாராகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ