உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக்கில் சென்றவர்களை யானை தாக்கியது உயிர் தப்பிய தாய், மகன் அதிர்ச்சி

பைக்கில் சென்றவர்களை யானை தாக்கியது உயிர் தப்பிய தாய், மகன் அதிர்ச்சி

கூடலுார்:மசினகுடி, பொக்காபுரம் சாலையில், காட்டு யானை தாக்கியதில், பைக்கில் சென்ற தாய், மகன் காயங்களுடன் உயிர் தப்பினர்.மசினகுடி, பொக்காபுரம், தொட்டலிங்கி மேல்தக்கல் பகுதியை சேர்ந்தவர் தெய்வத்தாய்,47. இவர் நேற்று காலை, 7:30 மணிக்கு, வீட்டிலிருந்து மகன் கோகுல்ராஜுடன் பைக்கில் பொக்காப்புரம் சாலை வழியாக, மசினகுடி நோக்கி வந்துள்ளார். அப்போது, திடீரென சாலைக்கு வந்த யானை இவர்களை தாக்கியுள்ளது. இருவரும், பைக்கை கீழ் போட்டு ஓடி உயிர் தப்பினர்; யானை பைக்கை சேதப்படுத்தியது. அப்போது, அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் யானையை விரட்டினர்.யானையிடம் இருந்து, காயத்துடன் தப்பிய இருவரும் சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.போலீசார், மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். வன ஊழியர்கள் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.வனச்சரகர் தனபால் கூறுகையில் ''காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க வேண்டி ஓடிய போது, விழுந்ததில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள்,தற்போது,தாய்; மகன் நல்ல நிலையில் உள்ளனர். வனத்துறை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டது. அப்பகுதியில் யானைகள் கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சாலையில், மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் இருப்பின் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ