உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதிய வரவான நர்ஜிஸ் மலர்கள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதிய வரவான நர்ஜிஸ் மலர்கள்

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான 'நர்ஜிஸ்' மலர்கள் தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, கோடை சீசன் நாட்களில், பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு வரும் மே மாதம், கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்காக, பல வண்ணங்களில், பல்வேறு வகையான, 5 லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான 'நர்ஜிஸ்' என்ற மலர்கள், தொட்டிகளில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள், அலங்கார தொட்டிகளின் நடுவே நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி