உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்ட எஸ்.பி., கார் மீது மோதி எரிந்த பைக்: ஒருவர் பலியான சோகம்

நீலகிரி மாவட்ட எஸ்.பி., கார் மீது மோதி எரிந்த பைக்: ஒருவர் பலியான சோகம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் அருகே, நீலகிரி மாவட்ட எஸ்.பி., வாகனம் மீது பைக் மோதியது. இதில் பைக் எரிந்தது. பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். நீலகிரி மாவட்ட எஸ்.பி., வாகனம் கோவை செல்வதற்காக, நேற்று ஊட்டியில் இருந்து புறப்பட்டது. நேற்று மாலை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் துாரி பாலம் அருகே எஸ்.பி., வாகனம் வந்து கொண்டிந்த போது, எதிரே வந்த பைக் திடீரென மோதியது. இதில், பைக்கில் வந்த ஊட்டியைச் சேர்ந்த அல்டாப், 21 மற்றும் ஜூனைத், 21, ஆகிய இரு வாலிபர்களும் துாக்கி வீசப்பட்டனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பற்றி எரிந்த பைக்கின் தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த இரு வாலிபர்களும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், அல்டாப் வரும் வழியில் இறந்தார். ஜூனைத் சிகிச்சை பெற்று வருகிறார். நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தர வடிவேலு காரில் யார் வந்தனர் எனவும், விபத்து குறித்தும் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை