உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டிராக்டரில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி: டிரைவர் கைது டிரைவர் கைது

டிராக்டரில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி: டிரைவர் கைது டிரைவர் கைது

ஊட்டி;விவசாய பணியின்போது டிராக்டரில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சனத்குமார் கோஸ், 39. இவருடைய மனைவி ரேகா பாய். இவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். சொந்த ஊரில் சரியாக பணி வாய்ப்புகள் அமையாததால் வேலை தேடி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் சனத்குமார் கோஸ் வந்தார். மார்லிமந்து பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விவசாய கூலி உட்பட பல்வேறு பணிகளுக்கு சென்று வந்தார்.இந்நிலையில், மார்லிமந்து அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் இவர் பணி செய்து கொண்டிருந்தார். ஊட்டியை சேர்ந்த கிஷோர்,21,என்பவர் அந்த நிலத்தில் டிராக்டர் ஓட்டிவிட்டு டிராக்டரை ஓரமாக நிறுத்தினார். அப்போது டிராக்டரில் உள்ள 'ரொட்டேட்டர்' பகுதி இயங்கி கொண்டிருந்தது.அப்போது, டிராக்டருக்கு மிக அருகில் இருந்த தன்னுடைய பை மற்றும் செருப்பை எடுப்பதற்காக சனத்குமார் கோஸ் அங்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் ரொட்டேட்டர் பகுதியில் சிக்கி தலை மற்றும் உடலில் அவருக்கு காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், சனத்குமார் கோஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவர் கிஷோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ