மலை பாதையில் கவிழ்ந்த லாரி; போக்குவரத்து பாதிப்பால் சிரமம்
குன்னுார் : குன்னுார் மலை பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார் தேவாலா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் திலழமுதன்,27. இவர் சத்தியமங்கலத்தில் இருந்து லாரியில் சோளத்தட்டை கதிர்களை ஏற்றி அம்பலவயல் வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு குன்னுார் மலைப்பாதையில், 12வது கொண்டை ஊசி வளைவில் லாரியை திருப்பும் போது திடீரென சாலையில் லாரி கவிழ்ந்தது. அதில், டிரைவருக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது. அவர் குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்த விபத்தால், சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் சென்று வந்ததால், 'ஹைவே பேட்ரோல்' போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினர். இதற்காக, இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தியதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. கால்நடை தீவனம் மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.