சேட்லைன் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
கோத்தகிரி, ; கோத்தகிரி 'சேட்லைன்' பகுதியில் பல நாட்களாக, சிறுத்தை நடமாடி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், சமீப காலமாக குடியிருப்புகளில் நடமாடுவது தொடர்கிறது.இந்நிலையில், கோத்தகிரி 'சேட்லைன்' பகுதியில், ஒரு வாரத்திற்கு மேலாக சிறுத்தை நடமாடி வருகிறது. இதனால், மக்கள் அச்சத்திற்கு இடையே வெளியே சென்று வருகின்றனர்.குறிப்பாக, தங்களது குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, போலீஸ் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடி, கால்நடைகளை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.