உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உழவர் சந்தைக்கு படையெடுக்கும் மக்கள் பிற இடங்களில விலை உயர்வு எதிரொலி

உழவர் சந்தைக்கு படையெடுக்கும் மக்கள் பிற இடங்களில விலை உயர்வு எதிரொலி

ஊட்டி:ஊட்டியில் பிற இடங்களில் காய்கறிகளுக்கு விலை உயர்வால் மக்கள் உழவர் சந்தையை நாடி செல்வது அதிகரித்துள்ளது. ஊட்டி சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தையில், 80 கடைகள் உள்ளன. தோட்டக்கலை துறை சார்பில் சுழற்சி முறையில் கடை ஒதுக்கப்பட்டு விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். பிற இடங்களை காட்டிலும் உழவர் சந்தையில் விலை குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஊட்டி மார்க்கெட் உள்ளிட்ட நகரில் உள்ள பிற இடங்களில் உருளை கிழங்கு, பீட்ரூட், கேரட், தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளுக்கு, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்க்கெட் உள்ளிட்ட பிற பகுதிகளை தவிர்த்து உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்குவது அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் போதிய இடம் வசதியில்லாததால் மக்கள் காய்கறி வாங்கி வருவதில் 'தள்ளு முள்ளு' ஏற்பட்டு வருகிறது. தோட்டக்கலை வர்த்தக பிரிவினர் கூறுகையில்,'பிற இடங்களை காட்டிலும் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு, 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைவு என்பதால் மக்கள் உழவர் சந்தை வருவது அதிகரித்துள்ளது. விரைவில் புனரமைத்து கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி