உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதையில் குழாய்கள்

நடைபாதையில் குழாய்கள்

பந்தலுார், ;பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி மூலம், பாதி அளவுக்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை பல வியாபாரிகள், ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும், நடைபாதையின் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. அதில், குழாய்கள் உடைந்து நடந்து செல்லும் பாதசாரிகளை தடுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து பல முறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.எனவே, நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்; நடைபாதையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை