| ADDED : ஏப் 14, 2024 11:33 PM
கூடலுார்:கூடலுார் நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை அருகே, அரசு நகர சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம், 3:00 மணிக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கழிவறை உள்ள பகுதிக்கு சென்றபோது, பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, சுகாதார மையத்திலிருந்து ஊழியர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர். தகவல் அறிந்து அப்பகுதி மக்களும் சுகாதார மையம் முன் குவிந்தனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், தீயணைப்பு துறை வீரர்கள், கழிப்பிடம் அருகே, பதுங்கி இருந்த, 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். ஊழியர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். பிடிக்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'சிறிய அறையில் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இடப்பற்றா குறை காரணமாக மருந்துவ பொருட்கள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பாம்பு உள்ளே நுழைந்து இருக்கலாம். சம்பவத்தின் போது நோயாளிகள் யாரும் சுகாதார மையத்தில் இல்லை,' என்றனர்.