குன்னுார் மார்க்கெட் பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
குன்னுார்; குன்னுார் மார்க்கெட் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத, 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.குன்னுார் நகராட்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட தினசரி அங்காடிகள், சுதந்திரத்திற்கு பிறகு, நகராட்சியின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. கடந்த சில ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வாடகை உயர்வு செய்யப்பட்டதுடன், முந்தைய ஆண்டுகளின் நிலுவை தொகையையும் சேர்த்து நகராட்சியால் கட்டாயம் வசூலிக்கப்பட்டு வருகிறதுஇந்நிலையில், மார்ச் இறுதி நிதியாண்டு நிறைவு என்பதால், வாடகை வசூலிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களில், 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதில், கோழிக்கடை உரிமையாளர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கியதால், அவரது கடையில் வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டது.