உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சொத்துக்காக தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

சொத்துக்காக தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

ஊட்டி : சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி மிஷ்னரிஹில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், 72. இவருக்கு, சந்தோஷ், 42, விக்னேஷ், 40, ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் டீக்கடை நடத்தி வந்த மாணிக்கம், சில ஆண்டுக்கு முன் கரூரில் குடியேறினார்.சந்தோஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும், விக்னேஷ் திருச்சியில் உடல் எடை குறைப்பு சம்பந்தமான மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.சென்னையில் வசித்த சந்தோஷுக்கு கடன் இருப்பதாக கூறப்படுகிறது. கடனை அடைப்பதற்காக, மாணிக்கத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பிப்., 27ல், ஊட்டி, மிஷனரிஹில் பகுதியில் இருந்த சொந்த வீட்டை பழுது பார்ப்பதற்காக மாணிக்கம் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஊட்டியில் சொத்து பிரிப்பது தொடர்பாக தந்தை, மகனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணிக்கத்தின் கழுத்து பகுதியில் சந்தோஷ் கடுமையாக தாக்கியதில், ரத்த காயங்களுடன் சுய நினைவை இழந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணிக்கம் இறந்தது தெரியவந்தது. சந்தோஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ