உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில வினாடி - வினா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில வினாடி - வினா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அஸ்வந்த் கிருஷ்ணா, நவநீதகிருஷ்ணா, விக்னேஷ், அபினந்த் ஆகிய நால்வரும் சென்னை அண்ணா நுாலகத்தில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கான மன்ற செயல்பாடுகள் குறித்த வினாடி- வினா போட்டியில் பங்கேற்றனர். அதில், தங்கள் திறமையை வெளிக்காட்டி மாநில அளவில் ஏழாவது இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர். முதல், 10 இடம் பெறும் மாணவர்களுக்கு சென்னையில் மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில், அதிலும் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்கள் மற்றும் அவர்களை தயார்படுத்தி அழைத்து சென்ற ஆசிரியர் மகாலிங்கம் ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமலாம்பிகை மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். பந்தலுார் அருகே அம்பல வயல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ