| ADDED : ஜூன் 05, 2024 12:58 AM
குன்னுார்;குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, அதன் சேறு கலந்த நீர் சாலையில் ஓடியதால் மக்கள் நடமாட சிரமப்பட்டனர்.அருவங்காடு ஜெகதளா சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதுடன் மக்களும் அதிகளவில் நடந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன.அப்போது, சேறு கலந்த நீர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் மக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக, ஜெகதளா பேரூராட்சி துணை தலைவர் ஜெய்சங்கர் உட்பட அதிகாரிகள் வெடிமருந்து தொழிற்சாலைக்கு புகார் தெரிவித்தனர். எனினும் சாலையில் சேறு கலந்த நீர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஓடியது. மக்கள் கூறுகையில்,' இனிவரும் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்,' என்றனர்.