உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியாக தவிக்கும் குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை

தனியாக தவிக்கும் குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை

கூடலுார்;முதுமலை, மசினகுடி அருகே தனியாக தவித்து வரும் குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி -மாயார் சாலையோர வனத்தில் தாயை பிரிந்த குட்டி யானை தனியாக தவிப்பதாக, வனத்துறைக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. மசினகுடி வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், குட்டி யானையை ஆய்வு செய்தார். 'குட்டி யானை ஆரோக்கியமாக உள்ளது; அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல், கண்காணித்து, தாயுடன் சேர்க்கும் பணியை தொடர வேண்டும்,' என, கூறினார். இதை தொடர்ந்து 'டிரோன்' கேமரா உதவியுடன், அதன் தாயை தேடி கண்டுபிடித்து, அதனுடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தாயை பிரிந்த குட்டி யானைக்கு ஒரு வயது இருக்கும். அதன் தாயை கண்டுபிடித்து குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஓட்டுனர்கள், இப்பகுதி சாலையில் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி, வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி