உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

பந்தலுார்;பந்தலுார் பஜார் சாலையை முழுமையாக சீரமைக்காமல், பெயரளவுக்கு பணி மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம்- கேரளா- கர்நாடக மாநில எல்லையில் பந்தலுார் பஜார் பகுதி உள்ளது. இதனால், இப்பகுதியில் மூன்று மாநில வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றன.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்து சாலையின் மத்திய பகுதியில், 30 அடி துாரத்துக்கு முழுமையாக பெயர்ந்து குழியாக மாறி உள்ளது. இதனால், மழை காலங்களில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து செல்லும் நிலை தொடர்கிறது.இந்த சாலையை நெடுஞ்சாலை துறையினர் முழுமையாக சீரமைக்காமல், கடந்த மூன்று மாதங்களில், நான்காவது முறையாக பொக்லைன் உதவியுடன் ஜல்லி கற்களை பெயரளவுக்கு பெயர்த்து, சீரமைப்பு செய்து வருகின்றனர்.மறுபுரம் நல்ல நிலையில் உள்ள சாலையும் பெயர்த்தெடுக்கப்பட்டு, அதில் ஜல்லிக்கற்களை நிரப்புகின்றனர். மழை பெய்தால் மழை வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அனைத்தும் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. இதை தொடர்ந்து, கவுன்சிலர் ரமேஷ் தலைமையிலான பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறையின் கண்துடைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். எனினும், தரமான பணி நடக்கவில்லை.டிரைவர்கள் கூறுகையில், 'மக்களின் வரி பணத்தை வீணாக்காமல், தரமான முறையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை