மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம், 100 ரூபாய், 50 ரூபாய் என திடீரென உயர்த்தப்பட்டதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த பத்தாம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. ஆண்டு தோறும் பெரியவர்களுக்கு, 50 ரூபாய்; சிறியவர்களுக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலர் கண்காட்சி சமயத்தில் நுழைவு வாயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, 'கடந்த, 10ம் தேதி மலர் கண்காட்சியின் போது பெரியவர்களுக்கு, 150 ரூபாய் சிறியவர்களுக்கு, 100 ரூபாய்,' என, நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. 'நுழைவு கட்டணம் அதிகம்,' என, பல்வேறு தரப்பினர் அதிருப்திதெரிவித்ததை அடுத்து, 125 ரூபாயாக குறைக்கப்பட்டது. கடந்த, 26ம் தேதியுடன் மலர் கண்காட்சி நிறைவடைந்தது. இந்நிலையில், 'பழைய நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்,' என, சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். நேற்று முதல், பெரியவர்களுக்கு, 125 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாய்; சிறியவர்களுக்கான கட்டணம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
03-Oct-2025