உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சுற்றுலா பயணிகள்: தடுப்பது அவசியம்

யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சுற்றுலா பயணிகள்: தடுப்பது அவசியம்

கூடலுார்; 'முதுமலை, சாலையோரம் உலாவரும் காட்டு யானைகள் அருகே, வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள், உணவு, குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. மாயாறு ஆற்றை ஒட்டிய சாலை ஓரங்களிலும், வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.'மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு, மசினகுடி சாலை வழியாக பயணிக்கும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தக் கூடாது,' என, வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அவ்வப்போது, கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.சில சுற்றுலா பயணிகள் விலங்குகள் அருகே, குறிப்பாக யானைகள் அருகே, வாகனங்களை நிறுத்தி, படம் எடுத்து அதற்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கோபமடையும் யானைகள், வாகனங்களை தாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன், சுற்றுலா பயணிகள், யானை அருகே, வாகனத்தை நிறுத்தி, அதற்கு இடையூறு ஏற்படுத்தி, கோபமடைய செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளிடம், 'சாலையோரம் உலாவரும் வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தக் கூடாது' என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனினும், ஒரு சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணி மேலும், தீவிரப்படுத்தப்படும்,'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை