உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காசநோய் பாதிப்பு :கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

காசநோய் பாதிப்பு :கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், எச்.ஐ.வி., மற்றும் காசநோய் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கையால், நீலகிரி மாவட்டம் காசநோய் தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் இத்தகைய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கட்டபெட்டு பஜாரில், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், 'காச நோயால் பாதிக்கப்பட்டவர், ஒருமுறை இரும்புவதால், காற்றில் பரவும் லட்சக்கணக்கான கிருமிகளை, மற்றவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களது நுரையீரலை அடைந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இருமல், பசியின்மை, எடை குறைவு, மாலை நேர காய்ச்சல், இரவில் வியர்த்தல், நெஞ்சுவலி, சளியில் ரத்தம் போன்ற அறிகுறிகள் காசநோய் உள்ளவர்களுக்கு தொற்று வாய்ப்பு உள்ளது. இதனால், அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து பயனடையலாம். இதே போல, முறை தவறும் உறவுகளால், எச்.ஐ.வி., பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் நிலை உள்ளது. ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கும். இதனை ஒழிக்க, ஒருவருக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு தேவைப்படுகிறது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த பரிசோதனை செய்து, தங்களையும், சார்ந்தவர்களையும் பாதுகாக்க வேண்டும்,' என, வலிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அபிநயா கலை குழுவினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை