உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத ரயில் நிலையம்; பயணிகள் அதிருப்தி பராமரிப்பில்லாத ரயில் நிலையம்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

பராமரிப்பில்லாத ரயில் நிலையம்; பயணிகள் அதிருப்தி பராமரிப்பில்லாத ரயில் நிலையம்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

குன்னுார், ; 'குன்னுார் அருகே பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தை மீண்டும் பொலிவு படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில், பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2005ல் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்கள் சீரமைக்க 'அம்ரித் கா மகோத்சவத்' திட்டத்தின் கீழ், ஊட்டி, குன்னுார் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்கள் பொலிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதேசமயம், ரன்னிமேடு நிலையம் பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து, 26.6 கி.மீ., தொலைவில் உள்ள இந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை சுற்றிலும் அழகிய மலைப்பகுதிகள் காணப்படுகின்றன. காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட நதியும் இங்கு உள்ளது. தோட்டக்கலைதுறையின் காட்டேரி பூங்காவும், இதே இடத்தில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் சமீபத்தில் புதிதாக கழிப்பிடமும் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இரு ரயில்கள் வரும்போது நிறுத்துவதற்கான மாற்று ரயில் தண்டவாளம் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. 'இங்குள்ள குடியிருப்புகளை பராமரித்து ரயில்வே செயல் திட்டங்களுக்கு பயன்படுத்தவும், நீலகிரி மக்களின், 20 ஆண்டுகால கோரிக்கையான ரன்னிமேடு நிலையத்தை 'ஹால்ட்' நிலையமாக மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''சர்வதேச சுற்றுலா பயணிகள் பயணிக்கும் மலை ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளை கூட முறையாக பராமரித்து வைக்கப்படவில்லை. ரயில் பாதை சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகளுக்கு தனியாக ரயில்வே பொதுப் பணித்துறை உள்ள நிலையில், இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.நிலையத்தின் பெயர் பலகையை முறையாக பராமரித்து வைக்கவும், ரன்னிமேடு ரயில் நிலையம் பழமை மாறாமல் பொலிவு படுத்தி, மாற்று ரயில் நிறுத்தும் தண்டவாளம் சீரமைக்க வேண்டும், இந்த பகுதிக்கு தனியாக ரயில்களை இயக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை