உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வள்ளி கும்மி அரங்கேற்றம்

வள்ளி கும்மி அரங்கேற்றம்

அன்னுார் : அக்கரை செங்கப்பள்ளியில், நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஒரு மாதமாக வள்ளி கும்மி பயிற்சி அளிக்கப்பட்டது.இதையடுத்து வள்ளி கும்மி கலைக்குழுவின் அரங்கேற்ற விழா வருகிற 30ம் தேதி மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை அக்கரை செங்கப் பள்ளி கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது.இதில் சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ விருது பெற்ற நடன ஆசிரியர் பத்திரப்பன், நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.பொதுமக்கள் அரங்கேற்ற விழாவில் பங்கேற்று கண்டு களிக்க கலைக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை