மேலும் செய்திகள்
சூதாட்ட சேவல்களை 'சூப்' வைக்கும் போலீசார்!
05-Sep-2024
ஊட்டி:''விஜயின் முதல் மாநாடு முடிந்த பின் தான் கருத்து சொல்ல முடியும்,'' என, விஜய பிரபாகரன் தெரிவித்தார்.ஊட்டி அருகே சோலுார், தலைகுந்தா, காந்தள் போன்ற பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த, தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில்,'' நீலகிரியில் தே.மு.தி.க., வின் வளர்ச்சி தந்தை காலத்தில் இருந்தே நல்ல வளர்ச்சியாக இருந்து வருகிறது. எனது தந்தை ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு வந்திருந்த இடங்களை பார்வையிட்ட போது அங்கிருந்தவர்கள் என்னை பாசத்தோடு பேசி தந்தையை பற்றி நினைவு கூர்ந்தனர்.தமிழகத்தில் தே.மு.தி.க., நடத்திய முதல் மாநாடு போல் வேறு எந்த கட்சியும் இதுவரை நடத்தியத்தில்லை. அதேபோல், விஜயின் முதல் மாநாடு நடந்து முடிந்தபின் அதனுடைய தாக்கம் தெரியும். அதன் பின்பே தான் கருத்து சொல்ல முடியும். மாநாடு நடத்த வாழ்த்து தெரிவிக்கிறேன்,'' என்றார். அதன்பின், காந்தள் பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார்.
05-Sep-2024