உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பவானி ஆற்றில் தென்பட்ட நீர் நாய்கள்

பவானி ஆற்றில் தென்பட்ட நீர் நாய்கள்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர் நாய்கள் தென்பட்டதால், மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானி ஆறு இருந்து வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்படும் சாமண்ணா நீரேற்று நிலையத்தின், கரைகளில் நேற்று நீர் நாய்கள் தென்பட்டன.மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற, நன்னீர் விலங்கான நீர் நாய்களை, இதுவரை பவானி ஆற்றில் யாரும் பார்க்காத நிலையில், நேற்று பவானி ஆற்றில் தென்பட்டதால் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:-மீன்கள் அதிகளவில் வசிக்கும் இடங்களில் வாழக்கூடியவை நீர்நாய்கள். இவை பவானி ஆற்றில் தென்படுவது இதுவே முதல் முறை. நீர்நாய் பாலூட்டி விலங்காகும். இவை பெரும்பாலம் காவிரி ஆற்றங்கரையோரம் தென்படும். அழிவின் விளிம்பில் உள்ள இந்த நீர் நாய்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.இயற்கைக்கு நீர் நாய்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நீர் நாய்களை வேட்டை கும்பல்களிடம் இருந்து வனத்துறை பாதுகாக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ