உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு; ஊழியர்கள் 200 பேர் பங்கேற்பு

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு; ஊழியர்கள் 200 பேர் பங்கேற்பு

கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மூக்கூர்த்தி தேசிய பூங்கா, கூடலுார் வன கோட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று காலை, 6:30 மணிக்கு துவங்கியது. முதுமலை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில், வனச்சரகர்கள் தலைமையில், 20 இடங்களில் வன ஊழியர்கள் தன்னார்வலர்கள், 80 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கூடலுார் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில் வனச்சரகர்கள் தலைமையில், 20 இடங்களில் 80 பேர்; முதுமலை மசினகுடி பகுதியில் மூன்று இடங்களில் வன ஊழியர்கள் தன்னார்வலர்கள், 15 பேர்; முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஐந்து இடங்களில், 20 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, கூடலுார் பகுதியில், 48 இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில், வன ஊழியர்கள், பறவை ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள், 200 பேர் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் பறவைகளின் விவரங்கள் அடிப்படையில், நீர்வாழ் பறவைகள் இனங்கள் குறித்த விபரம் தெரியவரும். தொடர்ந்து, 15, 16ம் தேதிகளில் நில வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி