உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி ஏ.டி.சி., நிழற்குடை பகுதியில் தரையில் அமரும் அவலநிலை ; பெண்கள் கடும் அதிருப்தி

ஊட்டி ஏ.டி.சி., நிழற்குடை பகுதியில் தரையில் அமரும் அவலநிலை ; பெண்கள் கடும் அதிருப்தி

ஊட்டி; ஊட்டி ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில், மக்கள் பஸ்சுக்காக தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஊட்டி ஏ.டி.சி. , பஸ் ஸ்டாண்டிலிருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான அரசு, மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களுக்கு செல்ல மக்கள் அங்கு வருகின்றனர். நகராட்சி சார்பில் இரண்டு இடத்தில் பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை அமைத்து, இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிழற் குடையை பராமரிக்காமல் விட்டதால், இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் அங்கு தங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி உள்ளனர். இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உட்பட பிற பயணியர் இருக்கை வசதி இல்லாததாலும், இடப்பற்ற குறையால் தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு நிழற் குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ