சிறந்த மருத்துவ பணி 16 பேருக்கு விருது
ஊட்டி ,; ஊட்டியில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் மருத்துவ துறையின், 16 பேருக்கு பதக்கம் , சான்றிதழ் வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில்,குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது. குடியரசு தின நிகழ்ச்சியின் போது முதல்வர் பதக்கம், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை கவுரவித்து பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முறை, மருத்துவ துறையின் கீழ் உள்ள, 'ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை, பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஊரக நல பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்,' என, 'டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள்,' என, 16 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி பாராட்டு தெரிவித்தார்.