குன்னுார் மார்க்கெட்டில் 18 கடைகளுக்கு சீல்
குன்னுார், ; குன்னுார் மார்க்கெட்டில், நிலுவை வாடகை வைத்த, 18 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு வாடகை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், மார்க்கெட் கடைகளை இடித்து, புதிய கடைகளை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்பாக வாடகையை வசூலிக்க நகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதில், நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் வாடகை நிலுவையில் உள்ள, 18 கடைகளுக்கு சீல் வைத்தனர்.