உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கிணறு வெட்டிய போது மண் சரிந்து 2 பேர் பலி

 கிணறு வெட்டிய போது மண் சரிந்து 2 பேர் பலி

கோத்தகிரி: கிணறு வெட்டிய போது, மண் சரிவு ஏற்பட்டு, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலுார்மட்டம் அருகே ஒன்னட்டியில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், பயணியர் தங்கும் விடுதி கட்டி வருகிறார். இதற்காக, அதே பகுதியில், 30 அடி ஆழத்தில் கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில், இரண்டு தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர். போலீஸ் விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள், கோத்தகிரி, குண்டாடாவை சேர்ந்த செல்வம், 50; சதீஷ், 43, என, தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ