மேலும் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு இரட்டை ஆயுள்
02-Aug-2025
போக்சோ வழக்கில் பெயின்டருக்கு 20 ஆண்டு சிறை
09-Aug-2025
ஊட்டி: ஊட்டி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த, கூலி தொழிலாளி தம்பதிக்கு, 17 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். தம்பதியினர் இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், வீட்டில் இருந்த, 17 வயது சிறுமி மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம், 24,என்பவர் சிறுமியை காதலிப்பதாக நெருங்கி பழகியதும், திருமணம் செய்து கொள்வதாக, கூறி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை, 2021 ஆக., 31ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜீவானந்ததிற்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி எம்.செந்தில்குமார் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.
02-Aug-2025
09-Aug-2025