உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காற்றில் சாய்ந்த 2,000 நேந்திரன் வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

காற்றில் சாய்ந்த 2,000 நேந்திரன் வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

கூடலுார் : கூடலுார் பாடந்துறை பகுதியில் காற்றில், 2,000 த்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. மழையுடன் அடிக்கடி வீசும் காற்றில் மரங்கள், மரக்கிளைகள் சாய்ந்து மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைவதுடன், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களும் பாதித்து வருகிறது.நேற்று முன்தினம், மாலை பாடந்துறை பகுதியில் வீசிய பலத்த காற்றில், அப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த, 2000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்தன. ஓரிரு மாதங்களில், வாழை தார்கள் அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் ஈடு செய்ய முடியாத நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வருவாய் துறையினர், தோட்டக்கலை துறையினர் ஆய்வு ஆய்வு செய்து, சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுத்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'அடுத்த மாதம் வாழை தார்கள் அறுவடை செய்ய இருந்த நிலையில், காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விவசாயத்துக்கு பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை