உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் கதர் அங்காடியில், காந்தியடிகளின் படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செய்து, கதர் விற்பனையை துவக்கி வைத்தார். கலெக்டர் கூறியதாவது, நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையே முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு, நூல் நூற்பு நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு மற்றும் கொல்லு தொழில் போன்ற தொழில்களில் வருவாய் ஈட்டவும், கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கவும் காந்தியடிகள் அறிமுகப்படுத்தியதே கதர் கிராம தொழில் திட்டங்களாகும். நீலகிரி மாவட்டத்திற்கு, 2026 –- 27ம் ஆண்டிற்கு, 1.45 கோடி ரூபாய் கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கதர் பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த சிறப்பு சலுகைகளை பெற்று, காந்தியடிகளின் கனவை நனவாக்க கதர் ரகங்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.’’ என்றார் கடந்த, 2025 -– 26ம் ஆண்டு, 13.48 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக சாரல் ஷாம்பூ, எழில் குளியல் நீர்மம் (பாடி வாஷ்), ஒளிர் டிஷ் வாஷ் ஜெல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !