விற்பனைக்கு கொண்டு வந்த 50 கிலோ போதை வஸ்து பறிமுதல்
குன்னுார் : குன்னுாரில் விற்பனைக்கு கொண்டு வந்த, 50 கிலோ போதை வஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.குன்னுார் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போதை வஸ்துக்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதாக, குற்றப்பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., முத்தரசு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், சிறப்பு எஸ்.ஐ., ஜார்ஜ், குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ரமேஷ் குமார், ஆனந்த், பாட்சா, ரியாஸ் அடங்கிய போலீசார் சோதனை நடத்தினர். அதில், வி.பி., தெருவில் குமாரவேலு,42, என்பவரின் குடோனில், 50 கிலோ போதை வஸ்துக்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் பேரில் அவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.