உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 10 கோடியில் 55 புதிய திட்ட பணிகள் திறப்பு

ரூ. 10 கோடியில் 55 புதிய திட்ட பணிகள் திறப்பு

ஊட்டி: ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி, 10.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற, 55 பணிகளை திறந்து வைத்தார். பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கார்டு, 3 பயனாளிகளுக்கு 1.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவி, 3 பயனாளிகளுக்கு முதல்வரின் விபத்து நிவாரண உதவியாக, 3 லட்சம் ரூபாய், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மூன்று பயனாளிகளுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் முனைவோர் கடன் உதவி, 3 பயனாளிகளுக்கு, 23 லட்சம் ரூபாயில் சுய உதவி குழு கடன் உதவி, தோட்டக்கலை இயக்கம் முன்னணி செயல் விளக்கம் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, 18.75 லட்சம் மதிப்பில் கடன் உதவி உட்பட, 40 பயனாளிகளுக்கு, 1.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., பிருந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி, கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர், மாவட்ட வன அலுவலர் கஷாப் சசாங் ரவி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !