மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
14-Sep-2025
ஊட்டி; நீலகிரியில் நடந்த லோக் அதாலத்தில், 703 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு கள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டியில் நடந்த முகாமை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில், 'நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், குடும்ப பிரச்னை குறித்த வழக்குகள்,' என, 1,391 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 703 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அத்துடன் இந்த வழக்குகளுக்கு, 5.46 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சசிகலா ஆகியோர் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
14-Sep-2025