உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடரும் மழையால் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் 800 ஏக்கர் பாதிப்பு! உரிய இழப்பீடுக்கு சிறு விவசாயிகள் வலியுறுத்தல்

தொடரும் மழையால் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் 800 ஏக்கர் பாதிப்பு! உரிய இழப்பீடுக்கு சிறு விவசாயிகள் வலியுறுத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு மலை காய்கறிகள்; வாழைகள்,' என, 800 ஏக்கர் பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'நீலகிரி மாவட்டத்திற்கு, 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்ட, 25, 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முடிந்தும் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய தோட்டங்களில் விளை பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 'ஊட்டி அருகே எம். பாலாடா, கப்பத்தொரை , நஞ்சநாடு , இத்தலார், போர்த்தி ஹாடா , மணலாடா , தங்காடு ஓரநள்ளி, பி. மணி ஹட்டி , பாலகொலா , பெம்பட்டி , எமரால்டு , லாரன்ஸ், காந்திகண்டி,' உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் சரிவான பகுதியில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் பாதிக்கப்பட்டன. நீரோடை ஆக்கிரமிப்புகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, 700 ஏக்கர் அளவுக்கு காய்கறி அழுகி பாதிக்கப்பட்டது. அதேபோல், கூடலுார், பந்தலுார் சுற்றுவட்டாரத்தில், சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, 100 ஏக்கருக்கு மேல் வாழைகள் பாதிக்கப்பட்டன. மூன்று நாட்களாக மழை தொடர்வதால் மேலும் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். 'தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்

விற்பனைக்கும் வரத்து குறைவு

ஊட்டி சுற்று வட்டார கிராம மக்கள் தங்களது மலை காய்கறி தோட்டத்தில் அறுவடை செய்யும் மலை காய்கறிகளை ஊட்டி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மழை தொடர்ந்ததால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில்,'' நீலகிரிக்கு 'ரெட் அலர்ட் ' அறிவிப்பால் மழை தொடர்ந்து, மலை காய்கறி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக அதிகபட்சம், 5 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. பெரியளவில் விற்பனையும் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார். தோட்டக் கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''மழைக்கு மலை காய்கறி தோட்டங்கள் பாதிப்பு குறித்து அந்தந்த வட்டத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆய்வு மேற்கொண்ட அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை