மேலும் செய்திகள்
ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு
28-Nov-2024
ஊட்டி; ஜனாதிபதி செல்லும் சாலையில் திடீரென புகுந்த பசுமாடால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு நான்கு நாள் சுற்று பயணமாக ஊட்டி வந்து, ராஜ் பவனில் தங்கியுள்ளார். நேற்று, குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்க காலை, 11:00 மணிக்கு ராஜ் பவனிலிருந்து காரில் புறப்பட இருந்தார். இதன் காரணமாக, கான்வாயில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜனாதிபதி செல்வதற்கு முன்பு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையோரத்தில் நடந்து சென்றவர்களை நடைப் பாதையில் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது, திடீரென தலையாட்டி மந்தில் திடீரென சாலை நடுவே வந்த பசுமாடு ஆவின் பஸ் ஸ்டாப் வரை அங்கும், இங்குமாக ஓடியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பசுமாட்டை பிடிக்க ஓடினர். பிடிக்க முடியவில்லை. பைக்கில் சென்று போலீசார் பிடிக்க முற்பட்டனர். பின் , நகராட்சி ஊழியர்கள் வந்து பசு மாட்டை பிடித்து சென்ற பின், போலீசார் நிம்மதியடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
28-Nov-2024