இடிந்து வரும் ஆற்றோர தடுப்பு சுவர்; கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
குன்னுார் : குன்னுார் சுப்ரமணியர் கோவில் அருகே கடைகள் உள்ள ஆற்றோர தடுப்பு சுவர் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் கனமழை பெய்து வந்த நிலையில், அவ்வப்போது பகலிலும் மழை பெய்கிறது. மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில். குன்னுார் சுப்ரமணியர் கோவில் அருகே கடைகள் கட்டப்பட்டுள்ள, ஆற்றோர தடுப்பு சுவர் விரிசல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இடிந்து சில கற்கள் ஆற்றில் விழுந்தது. இரவில் மழை நீடிப்பதால் தடுப்பு சுவர் இடிந்து கடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஏற்கனவே, சில ஆண்டுக்கு முன்பு, இந்த ஆற்றில் தடைகள் ஏற்பட்டதால், கிருஷ்ணாபுரம் பகுதியில் கனமழையின் போது தண்ணீர் தேங்கி வாகனங்கள் அடித்து சென்றன. வரும் வடகிழக்கு பருமழையின் போது பாதிப்புகள் ஏற்படுவதற்குள் இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.