உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீருக்கு பயன்படும் தடுப்பணை சாய்ந்து கிடக்கும் மரத்தால் பாதிப்பு

குடிநீருக்கு பயன்படும் தடுப்பணை சாய்ந்து கிடக்கும் மரத்தால் பாதிப்பு

கூடலுார்; கூடலுார் இரும்புபாலம் அருகே, குடிநீர் பயன்பாட்டுக்காக, அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் சாய்ந்துள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தி உள்ளனர். கூடலுார் கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக, அப்பகுதி ஆற்றின் கரையில் கிணறு அமைத்து, அதிலிருந்து குழாய் மூலம், கோழிப்பாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு, தண்ணீர் எடுத்து சென்று, மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அங்குள்ள ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, குழாய் மூலம் கிணற்றுக்கு தேவையான கூடுதல் தண்ணீரை எடுத்து வருகின்றனர் இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மரம், சில தினங்களுக்கு முன், சாய்ந்து அங்குள்ள தடுப்பணையில் விழுந்தது. தற்போது, பெய்து வரும், மழையின் போது ஆற்றில் ஏற்படும் வெள்ளம், மரத்தை இழுத்து சென்றால், தடுப்பணை சேதமடையும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் விதத்தில், தடுப்பணையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ