உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு

பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு

குன்னூர்: குன்னூரில் பகலிலும் ஹைமாஸ் விளக்குகள் எரிந்தது. குன்னூர் நகராட்சியின் சார்பில், பஸ் ஸ்டாண்ட், பெட்போர்டு, மவுன்ட பிளசன்ட் உட்பட பல இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் நேற்று காலை 10: 00 மணியளவிலும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது. மக்கள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு இரவில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருந்ததால் இருள் சூழ்ந்து சிரமப்பட வேண்டி இருந்தது ; தற்போது பகலிலும் எரியவிடப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி