மேலும் செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு
14-Oct-2025
குன்னூர்: குன்னூர் ஆற்றோர பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால், தள்ளுவண்டி கடை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், எம்.ஜி ஆர். நகர் அருகே டி.டி.கே., சாலையில், மரத்துடன், 40 அடி உயரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரவு நேர உணவு தள்ளுவண்டி கடை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. மண்சரிவால், ஆற்றின் மேற்பகுதியில் உள்ள சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் மேலும் மண்சரிவு ஏற்பட்டு டி.டி.கே., சாலை துண்டிக்கும் நிலை உள்ளது. குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் அச்சத்தில் உள்ளனர். மண் மூட்டைகளை அடுக்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Oct-2025