உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உலா வந்த ஒற்றையன்; பைக்கில் வந்தவர்கள் எஸ்கேப்

சாலையில் உலா வந்த ஒற்றையன்; பைக்கில் வந்தவர்கள் எஸ்கேப்

பந்தலுார்; பந்தலுார் குந்தலாடி பகுதியில் சாலையில் நடந்த வந்த யானையை பார்த்து, பைக்கில் வந்தவர்கள் 'எஸ்கேப்' ஆகினர்.பந்தலுார் அருகே குந்தலாடி மற்றும் அதனை ஒட்டிய, குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, ஒற்றை யானை ஒன்று முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிடும் இந்த யானை, இரவு ஏழு மணிக்கு மேல் கிராமங்களுக்குள் 'விசிட்' செய்கிறது. வனத்துறையினர் இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, தொடர்ந்து முயற்சி செய்தும் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குந்தலாடி, கடலக்கொல்லி சாலையோர தோட்டத்தில் முகாமிட்டது. நேற்று காலை, 6:-30 மணிக்கு, கடலைகொல்லி சாலைப்பகுதியில் இருந்து, குந்தலாடி நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்போது, முக்கட்டி பகுதியிலிருந்து இருவர் பைக்கில் வந்து நிலையில், யானை சாலைக்கு வருவதற்குள், அங்கிருந்து சென்று தப்பினர். தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் சப்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி