உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய டிரான்ஸ்பார்மர் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு

புதிய டிரான்ஸ்பார்மர் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு

குன்னுார் : குன்னுார் பழத்தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் போக்க புதிதாக, 63 கே.வி.ஏ., 11 கே.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில், உபதலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பழத்தோட்டம், கிரேக்மூர், பவன் ஆகிய, 3 கிராமங்களை சேர்ந்த, 350 வீடுகள் பயன்பெறும் வகையில், பழத்தோட்டம் பகுதியில் புதிதாக, 63 கே.வி.ஏ., 11 கே.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி முன்னிலையில், உதவி பொறியாளர் (பொ) நிர்மல்குமார், உதவி பொறியாளர் சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை