வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் கார்ப்பரேட் தேயிலைத் தோட்டங்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகள்.ஆனால் சிறு குறு தேயிலை விவசாயிகள்,கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நாதியற்று கிடப்பது அரசுகளின் கண்களுக்கு தெரிவதில்லை.
குன்னூர் : ''தோட்ட பயிர்கள் அதிகம் பயிரிடுவதால், ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து, நிதி ஒதுக்கீடு செய்வது காலத்தின் கட்டாயம்,'' என, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் தொட்டா வெங்கடசாமி பேசினார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க, 131வது மாநாடு, சிறப்பு கண்காட்சி இரு நாட்கள் நடந்தன. நேற்று நடந்த மாநாட்டில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் தொட்டா வெங்கட சாமி பங்கேற்று பேசியதாவது:நம் நாட்டில் சவால்கள் நிறைந்த தொழில்களில் தோட்டத்தொழிலும் ஒன்று. இந்த சவால்களை எதிர்கொள்வது மற்றும் அதற்கான தீர்வு காண்பது தொழில் மேம்பட முக்கிய காரணிகளாகும். நம் நாட்டில், கடல் வாழ் உயிரினங்கள் கடல் உற்பத்தி ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் எர்ணாகுளத்தில் உள்ளது. இதே போல், தேயிலை, காபி, ரப்பர் உள்ளிட்ட தோட்ட பயிர்கள் அதிகம் பயிரிடுவதால், ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மேம்பாட்டு மண்டலம் அமைத்து, நிதி ஒதுக்கீடு செய்வது காலத்தின் கட்டாயம்.மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. இதை ஊக்குவித்தால் தரம் வாய்ந்த உற்பத்தியால் சர்வதேச அளவில் தோட்ட பயிர்களுக்கு தனிச்சந்தையை உருவாக்க முடியும். உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக இயக்குனர் நீரஜ் கோபா பேசியதாவது:நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவு தோட்ட பயிர்களுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தோட்ட பயிரில் சிறந்து விளங்கும் நம் நாட்டில் அதற்கான திறன் மேம்பாடு அவசியம். வடகிழக்கு மாகாணங்களில் ரப்பருக்கு நல்ல விலை கிடைப்பதால் பாரம்பரிய ரப்பர் பயிரிடும் இடங்களின் பரப்பளவு நீடிக்கப்பட்டு வருகிறது. இதே போல தான் தேயிலை, காபி போன்றவற்றிற்கும் பரப்பளவு அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 19வது தங்க தேயிலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கண்ணன் தேவன், ஹாரிசன் பிளாண்டேஷன், கோடநாடு, கிரீன் டீ எஸ்டேட் சாம்ராஜ் உட்பட பல்வேறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு 38 தங்க தேயிலை விருதுகள் வழங்கப்பட்டன.தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், உபாசி தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எல்லாம் கார்ப்பரேட் தேயிலைத் தோட்டங்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகள்.ஆனால் சிறு குறு தேயிலை விவசாயிகள்,கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நாதியற்று கிடப்பது அரசுகளின் கண்களுக்கு தெரிவதில்லை.