உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளத்தில் விழுந்தவர் மீது கல் விழுந்து மரணம்

பள்ளத்தில் விழுந்தவர் மீது கல் விழுந்து மரணம்

குன்னுார்; குன்னுாரில் நடந்து சென்றவர் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியானார்.குன்னுார் வெலிங்டன் மேல் பாரத்நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வராத நிலையில், இவரின் மனைவி அன்னலட்சுமி மற்றும் மகன் பிரவீன் ஆகியோர் தேடியுள்ளனர்.இந்நிலையில், அவர் அங்குள்ள நடைபாதை படிக்கட்டில் இருந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது; அங்கு வந்த பரிசோதனை செய்த ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம், அரசு மருத்துவமனைக்கு இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விசாரணையில், 'இவர் விழுந்த போது, அவரின் மீது மற்றொரு கல் தலையில் விழுந்து இறந்துள்ளார்,' என, தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை