உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உள்ளத்தில் இல்லை தளர்வு; ஆம்புலன்ஸ் மூலம் 11ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

உள்ளத்தில் இல்லை தளர்வு; ஆம்புலன்ஸ் மூலம் 11ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பாட்டவயல் மாணவி ஜாஸ்மின் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 11ம் வகுப்பு தேர்வு எழுத, ஆம்புலன்ஸ் மூலம் தேர்வுக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டார். அந்த மாணவி சிறப்பாக தேர்வு எழுத பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் சைனுதின். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும், எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும், தாய் மற்றும் தந்தை இணைந்தே செய்து தர வேண்டிய நிலை உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xdzwpf3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களின் இரண்டாவது மகள் ஜாஸ்மின் (வயது 17). இவர் பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று 11ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மாணவி ஜாஸ்மின் ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மாணவியை தேர்வு அறைக்கு, ஸ்ட்ரச்சர் மூலம் அழைத்து சென்றனர். பின்னர் தேர்வு அறையில் உதவியாளர் மூலம் தேர்வு எழுதினார். உடல் முழுவதும் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் பொது தேர்வு எழுதிய மாணவி ஜாஸ்மினை ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

இளந்திரையன் வேலந்தாவளம்
மார் 05, 2025 18:39

வாழ்த்துக்கள்.


S. Venugopal
மார் 05, 2025 14:25

இதுபோல் உள்ள மாணவ மாணவியர்களுக்கு பறக்கும் படை, Moving Squard, ஆசிரியர்களை வைத்து மருத்துவமனைகளிலோ அல்லது வீட்டிலோ தேர்வுகளை நடத்த கல்வித்துறை ஆவண செய்யலாம்.


Rajarajan
மார் 05, 2025 14:21

வாழ்த்துவோம். கைகால் நன்றாக இருந்தும், உழைக்காத சோம்பேறிகளுக்கு இது ஒரு பாடம்.


வாய்மையே வெல்லும்
மார் 05, 2025 13:50

சொந்தத்தில் கல்யாணம் முடிச்சா பிரச்சனை வரும்னு எங்கயோ படிச்ச ஞாபகம்


KRISHNAN R
மார் 05, 2025 13:14

கிரேட்


user name
மார் 05, 2025 12:45

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை