உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒற்றையடி பாதையில் தட்டுத்தடுமாறும் பயணம்

ஒற்றையடி பாதையில் தட்டுத்தடுமாறும் பயணம்

பந்தலூர்: பந்தலூர் அருகே செம்மண் கிராமத்திற்குச் செல்ல; ஒற்றையடி நடைபாதையே உள்ளதால் இப்பகுதி மக்கள் தினசரி தட்டு, தடுமாறி பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. பந்தலூர் அருகே நெல்லியாலம் நகராட்சியின் 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது செம்மண் கிராமம். இங்கு பழங்குடியினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர். இதில் சிறிது துாரத்துக்கு மட்டும் நகராட்சி மூலம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பழங்குடியினர் கிராமம் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த சில குடியிருப்புகளுக்கு, செல்வதற்கு சாலை வசதி இல்லாத நிலையில், தனியார் தோட்டத்தை ஒட்டிய ஒற்றையடி நடைபாதையை கடந்த பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை, தலைசுமையாக எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதுடன், இரவு நேரங்களில் தெருவிளக்கு வசதியும் இல்லாத நிலையில், தட்டு தடுமாறி பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. தங்களின் நிலை குறித்து இப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஏனோ இந்த பகுதியை ஆய்வு செய்யக்கூட செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். கோடைகாலங்களில் தடுமாறி பயணம் செய்த போதும், மழை காலத்தில் வழுக்கி விழுந்து பயணிக்கும் நிலையே ஏற்பட்டு உள்ளது. எனவே இந்தப் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, நடைபாதை வசதியாவது செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி